Hari Krishnamurthy's blog

Sunday 6 March 2016

Solar eclipse and maha SHIVA Rathri

[10:31PM, 06/03/2016] K Hariharan: ஞாபகபடுத்துறேன் :-
8ம் தேதி அமாவாசை
9ம் தேதி பா்சுவ சூரியக்ரஹணம் சம்பவிக்கிண்றது
சூரிய உதயத்திற்கு முன்னமேயே க்ரஹணம் ஏற்படுகின்றது சுமார் 6,45am மோட்சகாலம்
காலை 6,27 அளவில் சூரியோதயம்
என்பதால்
6 am ஸ்நானம்
6,25 to 6,40 am உள்ளாக
தர்பணமும் 6-45am மேல்
மோக்ஷஸ்நானம் செய்யவேண்டியது
( 8ம் தேதி மாலை
சூரியன் அஸ்தமித்த (6pm) பிறகு
சாப்பிடகூடாது)
அவகாசம் உள்ளவர்கள்
காலை 5am ஸ்நானம் செய்து ஜபங்கள் செய்யலாம் க்ரஹணகாலத்தில் செய்யப்படும் ஜபம் மற்றும் தானங்கள்
100 மடங்கு பலன் கொடுக்கும் என்பதால்
அவசியம் அனைவரும்
க்ரஹணத்தை அனுஷ்டிக்கவேண்டும்
க்ரஹணம் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் ஏற்படுவதால்
சதயம்,பூரட்டாதி,
உத்திரட்டாதி
புனர்பூசம்,விசாகம்
இவ்வைந்து நக்ஷத்திர
காரர்கள் க்ரஹணகாலத்தில்
அவசியம் ஸ்நானம்
ஜபம் இவற்றை அவசியம் அனுஷ்டிக்க வேண்டும்
[10:31PM, 06/03/2016] K Hariharan: ப(பி)டித்தது:-சிவராத்திரி :- (3 கோடி சிவராத்ரி பலன்)....
வரும், 7ம் தேதி சிவராத்திரி விரதம் இருந்தால், 3 கோடி சிவராத்திரிக்கு விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
சைவ மதத்தில், சிவனை வேண்டியிருக்கும் விரதங்களில், மகா சிவராத்திரி விரதமே அதிக சிறப்புடையது.
சிவராத்திரி விரதம், உத்தமம், மத்தியமம், அதமம் என, மூன்று வகைப்படும்.
சிவராத்திரி அன்று இரவில், நிசியில் சதுர்தசி திதி இருப்பது முக்கியம் என, பல ஆகமங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி அன்று திரியோதசி திதியும், அன்று இரவே சதுர்தசி திதியும் இருப்பது, உத்தம சிவராத்திரி என்பதாகும்.
அந்த நாள், இவ்வாண்டு மார்ச், 7ம் தேதி வருகிறது.
அன்றைய தினம், திரியோதசி திதி பகலிலும், சதுர்தசி திதி இரவு முழுவதும், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும் இருப்பதால், இது உத்தம சிவராத்திரி ஆகும்.
உத்தரகாரண ஆகமத்தில் உள்ளபடி, திங்கட்கிழமையும், சிவராத்திரியும் ஒன்று சேர்ந்தால் அது, 3 கோடி சிவராத்திரிக்கு சமமாகும்.
இந்த ஆண்டு மார்ச், 7ம் தேதி, திங்கட்கிழமையும், சதுர்தசி திதியும் சேர்ந்துள்ளதால், 3 கோடி சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன பலனோ, அந்த பலன், அன்று விரதம் இருந்தால் கிடைக்கும்.
எனவே, அனைவரும் அவரவர் வழக்கப்படி, இந்த சிவராத்திரி விரத நாளில், கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இரவு முழுவதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தும், சகல சவுபாக்கியங்களையும் அடைய வேண்டும்.

No comments: