http://vimeo.com/24456787 Follow @lokakshema_hari
Subject: Fwd: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் !!!!! - A must read thought provoking article.
சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் !
காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும்சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.
Tweet
free counters
http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website
Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group Tweet
Click to join lokakshema
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Tweet Flixxy! Visit My Website
Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group
Click to join lokakshema Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Royal National London http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe Royal National London Follow @lokakshema_hari send email to krishnamurthy.hari@gmail.com
Subject: Fwd: திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள் !!!!! - A must read thought provoking article.
மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...
திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...
சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவல நிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.
கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே ?.
எனக்கு என் காரியரும் ஃபைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம். நான் லைஃப்ஐஎன்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம்.

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...
இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாகமாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராதுதனிக்குடித்தனம் தான் ஒரே வழி.’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா? இதோ
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 60 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டியதுர்பாக்ய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 + வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
இதுதானா பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அளிக்கும் பரிசு !. இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
அவர்கள் இந்த நிலைமையில் வசதியாக இருக்கக் காரணமான பெற்றோர்களை நிரந்தர நோயாளியாக்கும் நிலை மாறுமா?. சிந்திப்பார்களா பெண் குழந்தைகள் !
காலமும் கடவுளும் தான் பதில் சொல்ல வேண்டும்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோரை / குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் / குரு பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 25 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும்சந்தேகமில்லை. எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய இறைஞ்சுவோம். || ईश्वरो रक्षतु||.
Tweet
free counters
http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
Click to join lokakshema
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
LOKAKSHEMA TRUST |
Visit this group |
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
website counter
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
LOKAKSHEMA TRUST |
Visit this group |
No comments:
Post a Comment