Hari Krishnamurthy's blog

Tuesday, 24 April 2012

இது மக்கள் மருத்துவமனை!
இது மக்கள் மருத்துவமனை!  - விகடன் - 25 ஏப்ரல் 2012 இதழிலிருந்து
 
 
செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில்இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சைஇதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான,காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...’ என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ஆச்சர்யமாக இருக்கிறதாடாக்டர் மாரிமுத்து சரவணனே சொல்கிறார்.
''என் சொந்த ஊர் ஈரோடு. எம்.பி.பி.எஸ். முடிச்சு ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். படிக்கிறப்ப இந்தத் தொழிலை சேவையாஉயிர் காக்கிற தர்மமாகச் சொல்லிக்கொடுத்தாங்க. ஆனாவேலைக்கு வந்துசேர்ந்த பின்பு நிலைமை தலைகீழ். பல தனியார் மருத்துவமனைகளுக்கு மனித உயிரைவிட பணமே பிரதானமா இருந்துச்சு. என் மனசாட்சியை அடகுவெச்சுட்டு வேலை பார்க்க முடியலை. வெளியே வந்துட்டேன்.
நோயாளிகளின் வீடுகளுக்கும் கிராமங் களுக்கும் போய் என்னால் முடிந்த மருத்துவச் சேவையை மருந்துக்கான நியாயமான கட் டணம் மட்டும் வாங்கிச் செஞ்சிக்கிட்டு இருந்தேன். இதை அறிந்த என் நண்பர்கள்சமூகச் சேவகர்கள்பொது மக்கள் எல்லாரும், 'சொந்தமா ஒரு மருத்துவமனையைக் தொடங்கலாம்னு சொன் னாங்க. உடனே ஸ்ரீகணபதி மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையைத் தொடங் கினோம். அதில் ஆரம்பத்துல 12பேர் மட்டுமே உறுப்பினர் களாக இருந்தாங்க. இப்ப 486 பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதில் 86 பேர் மட்டுமே டாக்டர்கள். மீதம் 400 பேரும் பொது மக்களே. இவங்க கொடுத்த நன்கொடையில்தான் இந்த மருத்துவமனை உருவானது.
எங்களுடைய நோக்கம்ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறணும்கிறதுதான். ஓர் உதாரணம் மட்டும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்னாடி குரு மூர்த்தினு ஒருத்தரை இங்கே கூட்டிக் கிட்டு வந்தாங்க. அவர் சாலை விபத்தில் சிக்கி,மூளையில் ரத்தக் கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந் தார். சாதாரண நடுத்தரக் குடும்பம். அவங்க கையில் 5,000 ரூபாய் மட்டுமே இருந்துச்சு. இந்த மாதிரி அறுவைச் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவ மனைகளில் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்காம அட்மிஷன் போட மாட்டாங்க. நாங்க பணத்தை ஒரு பொருட்டா நினைக்காம உடனடியா அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து உயிரைக் காப்பாத்தினோம். அந்த அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர் சேவைக் கட்டணம் இல்லாம எங்களுக்கு ஆன செலவுத் தொகை மட்டும் 88 ஆயிரம் ரூபாய். ஆனாநாங்க எதுவும் கேட்காமலேயே ஒரு மாசம் கழிச்சு வந்த குருமூர்த்தி, 'வேற எங்க போயிருந்தாலும் நான் உசுரோடத் திரும்ப வந்து இருப்பேனானு தெரி யலை. என் உசுரைக் காப்பாத்துனதுக்கு நன்றிங்க. என்னால 30ஆயிரம் ரூபாய் திரட்ட முடிஞ்சதுனு கண்கலங்கக் கொடுத்தார். உண்மையில் இதுதாங்க மருத்துவம். இதுபோன்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு டாக்டருக்கும் வாழ்நாள் நிறைவைத் தரும்.
எங்க மருத்துவமனையில 38 படுக்கை வசதிகளுடன் 24 டாக்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பாங்க. உறுப்பினர்களும் பொது மக்களும் கொடுக்கிற ஊக்கத்தால் எங்க சேவையின் அடுத்தகட்டமாக ஈரோட்டில் மிகப் பெரிய பல்துறை மருத்துவமனையைக் கட்ட முயற்சி செய்துக்கிட்டு வர்றோம்.
ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயங்கள் அத்தியாவசியம். அவைதரமான கல்விதரமான மருத்துவச் சிகிச்சை. ஆனாஇந்த இரண்டுமே நம் நாட்டில் பகல் கொள்ளை வியாபாரமாகிப் போனதுதான் சாபக்கேடு. இந்த நிலைமையை மாற்றத்தான் முயற்சி பண்ணிட்டு வர்றோம்!''நம்பிக்கையோடு பேசுகிறார் டாக்டர் மாரிமுத்து சரவணன்!
 


No comments: